புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம் - கமல் புத்தாண்டு வாழ்த்து!

 
kamal-haasan-344

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தேசிய தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு, அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம், புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.