கமல்ஹாசன் தலைமையில் மநீம 2வது பொதுக்குழு கூட்டம்..

 
கமல்ஹாசன் தலைமையில் மநீம 2வது பொதுக்குழு கூட்டம்..  


மக்கள் நீதி மய்யம்  கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம், கமல்ஹாசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் 2 வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால், முன்னதாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினருக்கு மநீம தலைமை சார்பில் கடிதம் அனுப்பப்படிருந்தது.  இந்த பொதுக்குழுவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட 700 க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டத்தில், 1414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2570 பேர் கலந்து கொண்டுள்ளனர். 

mnm

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த பொதுக்குழு  கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் நுழைத்தேர்வு விவகாரம், மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.