புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

 
tn

நடிகர் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.

vijay

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

kamal

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன்,  தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார். வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.