#Project K திரைப்படத்தில் இணைந்த கமல்ஹாசன் - படக்குழு அறிவிப்பு

#Project K திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபாஸ், அமிதாப் பச்சன்ன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் புராஜெக்ட் கே. இந்த திரைப்படத்தை நடிகையர் திலகம் திரப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் நிச்சயம் பான் இந்தியா படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Welcoming the greatest actor Ulaganayagan @ikamalhaasan. Our journey becomes Universal now. #ProjectK https://t.co/DIbI5R7YA2#Prabhas @SrBachchan @deepikapadukone @nagashwin7 @DishPatani @Music_Santhosh @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/pokTfuErl0
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) June 25, 2023
இந்த நிலையில், #Project K திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.