கமல் - குஷ்பூ திடீர் சந்திப்பு..! தலைவர் 173 படத்தை சுற்றி திரிந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

 
1 1

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த தலைவர் 173 திரைப்படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான ஒரு சில நாட்களிலேயே சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகியது மிகப்பெரிய அளவில் பேசும்பொருளானது.தான் இப்படத்திலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார் சுந்தர் சி.

இப்படி ஒரு சூழலில், நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ, சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சுஹாசினி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அது குறித்த புகைப்படத்தைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குஷ்பூ வெளியிட்ட அந்தப் பதிவில் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்:

அவருடைய நண்பியான சுஹாசினி உடன் ஒரு சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். "சினிமாவின் கலைக்களஞ்சியமான அவரிடமிருந்து அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது, இன்னும் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்க முடியாது" என்று நடிகர் கமல்ஹாசனைப் பாராட்டியுள்ளார். கமல்ஹாசன் தன்னுடைய சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டது மற்றும் அவருடைய மாணவராக தன்னுடைய அறிவுத் திறனை மேம்படுத்துவது பற்றியும் குஷ்பூ பேசியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் மற்றும் குஷ்பூ இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது

அவர்களின் நட்பு எப்போதும் போல தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது என்பதும் உறுதியாகியிருக்கின்றது. ஏனென்றால் சுந்தர் சி திடீரென தலைவர் 173 படத்திலிருந்து விலகியதால் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்ததாக சர்ச்சைகள் வெடித்தன. ஆனால் தற்போது குஷ்பூ மற்றும் கமல் சந்தித்து சகஜமாக பேசிக்கொண்டதன் மூலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.