"கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்ய வேண்டும்" - அண்ணாமலை விமர்சனம்!!

 
tn

தமிழக பாஜக மாநில தலைவரும்,  கோவை வேட்பாளருமான கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று சரவணம்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  "பிரதமர் நரேந்திர மோடியின் நாளை தமிழகத்திற்கு வருகிறார். நாளை மறுதினம் கோவை வரும் பிரதமர் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி, கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளின் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரையை செய்கிறார்.  வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் பிரதமர் 12ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் தமிழகம் வருவார்" என்றார்.

Annamalai

தொடர்ந்து பேசி அவரிடம்,  நாக்பூர் இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலஹாசன்  கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை,  கமல்ஹாசன் மூளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் சுய நினைவோடு தான் இருக்கிறாரா என்பதை மருத்துவ பரிசோதனை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தனது கட்சியை திமுகவிற்கு கமல்ஹாசன் விற்று விட்டார் என்று விமர்சித்து பேசினார்.

kamal

தொடர்ந்து பேசிய அவர்,  கோயம்புத்தூர் நகரப் பகுதியை பொருத்தவரை 150 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட நகரின் ஒரு பகுதியில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லை.  சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.  சரியான பாலம் அமைக்க வேண்டும் நீர்நிலைகளை புறநானிக்க வேண்டும் விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் ஆட்டோமொபைல் மற்றும் தொழில் துறை மேம்பாட்டுக்கான வளர்ச்சி மற்றும் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்து வருகிறோம். தேசிய தேர்தல் அறிக்கை வெளியிடவும் இந்த தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.