நண்பர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து - கமல் ஹாசன்

 
tt tt

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

rahul

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது. 


இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் , நண்பர் ராகுல்காந்திக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

"இரக்கம், பெருந்தனையுடன் தொடர்ந்து வழிநடத்தி உங்கள் நம்பிக்கையான அன்பு மற்றும் நல்லிணக்கத்தை பரப்புங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.