இன்று மக்களிடம் உரையாற்றுகிறார் கமலா ஹாரிஸ்..!
அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இதை அறிந்த கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் பெரும் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தலுக்கான வெற்றியாளர் ட்ரம்ப் என அறிவித்தபோது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கண்கலங்கி அழுதார்கள்.தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூட இதுவரை எந்த பதிவும் பதிவு செய்யவில்லை. தோல்வி குறித்தும் ஆதரவாளர்களுக்கு எதாவது சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து இன்னும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், கமலா ஹாரிஸ் எப்போது ஆதரவாளர்களிடம் பேசப்போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று கமலா ஹாரிஸ் தனது அல்மா மேட்டரான ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் பேசுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால்,அமெரிக்க நிறுவனம் வெளியிட்டு வரும் தகவலின் படி அவர் இன்று ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்துத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்துப் பேசலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.