உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

 
ச் ச்

மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி கமல்ஹாசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

Image

திமுக இளைஞரணி செயலாளரும் , தமிழ் நாடு  துணை முதலமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரத்ததானம் முகாம் மற்றும் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பல்வேறு திட்டங்களை திமுகவினர் செயல்படுத்திவருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி கமல்ஹாசன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.




இதற்கு தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “மக்கள் நீதி மய்ய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி கமல்ஹாசன், அவர்கள், நம் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வாழ்த்தினார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கின்ற குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் வாழ்த்தைப் பெற்றதில் மகிழ்கிறோம். அவருக்கு என் அன்பும், நன்றியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.