“தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து முதல்வரிடம் பேச உள்ளேன்”- கமல்ஹாசன்

 
கமல் கமல்

தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து முதல்வரிடம் பேச உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தெரிவித்தார். 

நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.," கமல்ஹாசன் பேச்சு.! - Dinasuvadu

நாடாளுமன்ற கூட்டத்துடன் நாளை மீண்டும் தொடங்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தோழர் திருமாவளவனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்றே அவருக்கு தெரியும். அவர்களது தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நிகழ்ச்சிக்கு வந்தார். விழா நடக்கும் வரையில் அவரது சின்னம்மா மூச்சை பிடித்துக் கொண்டு இருந்தார். தூய்மை பணியாளர்களிடம் பேச வேண்டும். நாங்களும் இது குறித்து முதல்வரிடம் பேசலாம் என்று இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.