'டிவி மேல ரிமோட் தூக்கி போட்டுட்டு எதுக்காக திமுகவிடமே சேர்ந்தீங்க?" - கமல்ஹாசன் விளக்கம்
திமுகவை விமர்சிக்கும் விதமாக ரிமோட்டை டிவியை நோக்கி கோபமாக வீசிய நிலையில் தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்தற்கான காரணத்தை கமல்ஹாசன் விளக்கியுள்ளார்.

தஞ்சாவூரில் கவிஞர் சிநேகனின் தந்தை படத் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய மநீம தலைவர் கமல்ஹாசன், “நீங்கள்தான் ரிமோட்டை டிவி மேலே தூக்கிப் போட்டீர்களே... பிறகு ஏன் திமுகவுடன் சேர்ந்தீர்கள்? என்றார்கள். நான் ரிமோட்டை தூக்கிப் போட்டது உண்மைதான். ஆனால், அந்த ரிமோட்டை வேறொரு ஆள் தூக்கிக்கொண்டு போய்விடக்கூடாது அல்லவா? ரிமோட் நம் மாநிலத்தில்தான் இருக்கவேண்டும். கல்வியே அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறோம். ரிமோட்டை மட்டும் விட்டுவிடுவோமா? அதனால் நமக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் எடுத்ததுதான் இந்த கூட்டணி. முடிந்தால் புரிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் சும்மா இருங்கள்” என்றார்.


