'காந்திக்கு இன்று பிறந்தநாள்... ஒரு சகாப்தம் ஜனித்த நாள்" - கமல்ஹாசன் ட்வீட்!

 
kamal

காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி என்னும் சகாப்தம் ஜனித்த நாள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர். அத்தனை வன்முறைகளும் அஞ்சும் அகிம்சையை அறிவித்த ஆற்றலாளர்  காந்திக்கு இன்று பிறந்தநாள். ஒரு சகாப்தம் ஜனித்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

kamal

அறவழியில் போராடி நம் நாடு சுதந்திரம் அடைந்திட முக்கிய காரணமாக அமைந்த மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று. காந்தி ஜெயந்தி தினமாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையிலுள்ள காந்தி சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்திற்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்! தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்! என்று குறிப்பிட்டிருந்தார்.

gandhi

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த பதிவில், அறவழிப் போராட்டம் நடத்தி நம் தாய் திருநாட்டின் விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற  நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்த தேசத்தந்தை காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாளில் அவரின் தியாகங்களை நினைவு கூர்கிறேன்.#GandhiJayanti2021 என்று குறிப்பிட்டிருந்தார்.