காமராஜர் பிறந்தநாள் - ஓபிஎஸ் மரியாதை!!

 
tn

 கர்மவீரர் காமராசர்  பிறந்த தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

tn

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவரும், தொழில் வளர்ச்சியை உருவாக்கியவருமான கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


நாட்டுச் சேவைக்கெனத் தம்மை அர்பபணித்துக் கொண்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள் எந்நாளும் இந்திய மக்களின் இதயங்களில் வீற்றிருக்கும் தலைவர் ஆவார். அவரின் தியாகத்தையும்,  சேவையையும் போற்றுவோம். என்று குறிப்பிட்டுள்ளார்.