மீண்டும் தொடங்கிய வடகலை - தென்கலை பிரச்சினை

 
Tn Tn

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை  - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உலக புகழ்பெற்ற கோயில் ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோயிலில் நீண்ட காலமாகவே வடகலை - தென்கலை பிரிவினர் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. வைகாசி பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று ரதராஜ பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி காஞ்சி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.

 

இந்த நிலையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை  - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வடகலை பிரிவினர் பெருமாள் முன்பு தாத்தாச்சாரியார்கள் மந்திர புஷ்பம் பாடுவதில் இடையூறு ஏற்படுத்துவதாக தென்கலை பிரிவினர் குற்றச்சாட்டினர். இதனால் இருபிரிவினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.