திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது!!

 
ttn


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா உற்சாகமாக தொடங்கியுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  கடந்த ஆண்டு காரணமாக கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  அத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது.

ttn

இந்நிலையில் நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா இன்று காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியுள்ளது . ஏழு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அத்துடன் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

ttn

கோயிலுக்கு வரும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக தற்காலிக காத்திருப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  சூரசம்ஹார விழாவை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.