முருகனின் அறுபடை வீடுகளில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

 
tn

முருகனின் அறுபடை வீடுகளிலும் இன்று காலை கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 

tiruchendur murugan temple

தீபாவளி பண்டிகை நேற்று முடிவடைந்த நிலையில் இன்று கந்தசஷ்டி திருவிழா தொடங்கியுள்ளது.  திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இன்று யாகசாலை பூஜை நடைபெற்றது.  யாகசாலையில் பூஜை தொடர்ந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

Murugan

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது.  கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல் துறை சார்பில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  அதேபோல திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.  கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் விரதம் தங்கி விரதம் இருந்து விடுதலை நிறைவேற்றுவர்.  வேல் வாங்கும் விழாவில் சூரசம்ஹாரம் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதேபோல திருத்தணி ,பழனி ,சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகனின் திருக்கோவில்களிலும் இன்று கந்தசஷ்டி விழா விமர்சையாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.