கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சூர்யா பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” என்னும் திரைப்படத்தில், இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள “தலைவனே” என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசூப் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நிஷாத் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கங்குவா திரைப்பட படத்தொகுப்பாளர் நிஷாத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நிஷாத் சூர்யா 45 படத்திலும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.


