தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டி - விருப்ப மனு தாக்கல் செய்தார் கனிமொழி

 
TN

மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தாக்கல் செய்தார் திமுக எம்.பி., கனிமொழி.

TN

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை மார்ச் 1 ஆம் தேதி முதல் தாக்கல் செய்து வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார். அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார் திமுக எம்.பி. கனிமொழி.

kanimozhi

ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப‌மனு தாக்கல் செய்த நிலையில் முன்னதாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.