மதச்சார்பின்மையும், கூட்டாட்சித் தத்துவமும் நிலைத்த நாடாக ‘இந்தியா’ மீளும் - கனிமொழி

 
Kanimozhi

நம் நாடு குடியாட்சி பெற்ற இந்நாளில் அனைவரது உரிமைகளையும் காத்திட உறுதியேற்போம் என கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார். 

75வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  இதனை தொடர்ந்து போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். குடியரசு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள குடியரசு தின வாழ்த்து செய்தியில், நாம் போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு அர்த்தமளித்த நாள் இன்று. அரசியலமைப்புச் சட்டம் எனும் பேராயுதத்தால், நம் நாடு குடியாட்சி பெற்ற இந்நாளில் அனைவரது உரிமைகளையும் காத்திட உறுதியேற்போம். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள். மதச்சார்பின்மையும் கூட்டாட்சித் தத்துவமும் நிலைத்த நாடாக ‘இந்தியா’ மீளும்!