5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.,

 
kanimozhi

ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.  

இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள்  நேற்று நடைபெற்றன.  சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.  குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, LB சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள்  வெள்ளத்தில் மூழ்கியது.  இதனால் சென்னையின் பிரதான சாலைகளான  பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, அண்ணா சாலை, ராஜாஜி சாலைகளில் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.  

5  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.,

இதனிடையே  வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டது. பலரும் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக  மயக்கமடைந்து கீழே விழுந்தனர். போதிய தண்ணீர், உணவு கிடைக்காமலும் பலர் தவிப்புக்கு ஆளாகினர்.  40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு அரசின் அலட்சியப்போக்கே காரணம் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Chennai Air Show

இந்நிலையில்  5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக திமுக எம்.பி.,  கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.