திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது - கனிமொழி அதிரடி பேச்சு!

 
kanimozhi


தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வருகின்ற 6 மற்றும் 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதையொட்டி பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதே வேளையில் ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இன்று நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

kanimozhi

அந்த வகையில் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் திமுக எம்.பி கனிமொழி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எதையும் செய்யவில்லை. அந்த பயத்தின் காரணமாகவே திமுக எதையும் செய்யவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அதிமுகவினர் செய்யாததை ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஸ்டாலின் செய்துவிட்டார். திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவுக்கு பதிலாக இருக்கும். திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அதிமுக பயப்படுகிறது என்று தெரிவித்தார்.

மேலும் திமுகவின் ஆட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்த கனிமொழி, ஆதார் மையங்களில் பணிபுரியும் பெண்கள் பணி நிறுத்தம் செய்யப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.