பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டுமா?- விஸ்வகர்மா திட்டத்திற்கு கனிமொழி எதிர்ப்பு
Nov 28, 2024, 21:00 IST1732807848000
இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது எனும் முடிவு குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, “திமுக விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர், திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விஸ்வகர்மா திட்டத்தை திமுக தீவிரமாக எதிர்ப்பதன் காரணத்தை ஏற்கனவே மிகத் தெளிவாக கூறியுள்ளார். எனது நிலைப்பாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டும் எனும் குலத்தொழில்முறையையும் அத்திட்டம் இங்கு மீண்டும் கொண்டுவருகிறது. அதை நாங்கள் ஏற்கமுடியாது” எனக் கூறினார்.