பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது- கனிமொழி

 
அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது- கனிமொழி அரசியல் விளையாட்டு காரணமாக நாளை அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுகிறது- கனிமொழி

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும், அவரை கொச்சைப்படுத்த கூடிய, விமர்சனம் படுத்த கூடிய நிலை இருந்தாலும் பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது என எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

த.வெ.க தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?- கனிமொழி பதில்


விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட பொருப்பாளர் பொன்.கெளதமசிகாமணி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாநில, மாவட்ட  மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எம்பி கனிமொழி, “திராவிட மாடல் ஆட்சியை தாங்கி பிடிக்ககூடிய குழுவாக மகளிர் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மகளிருக்கான திட்டங்களை கொடுத்து வருகிறோம். பெண்கள் பட்டம் பெறுவது சாதாரணமாக வந்துவிடவில்லை, போராட்டம் இல்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது திமுகாவால் தான். பெண்களை முன்னேற்ற கூடிய ஆட்சி இருந்தால் தால் பெண்களுக்கு வளர்ச்சி கிடைக்கும், அதனால் தான் புதுமைபெண் திட்டம் மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்லூரி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

கனிமொழி

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும், அவரையே கொச்சைப்படுத்த கூடிய விமர்சனம் படுத்த கூடிய நிலை உள்ளது, பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது. இந்த மண்ணில் ஜாதி இல்லை என கூறும் ஒவ்வொருவரின் மனதிலும் பெரியார் வாழ்ந்து வருகிறார். பிற்போக்கு தனத்தை திணிக்காதே என்று சொல்லக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு. பட்ஜெட்டில் திருக்குறள் மட்டுமே வாசிக்கப்படுகிறது, தமிழகத்திற்கு வேறொன்றும் இல்லை, திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்தான் முன்னாள் மறைந்த தலைவர் கருணாநிதி. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பொதுமக்கள் பார்வையிட செல்லும் போது விவேகானந்தர் சிலைக்கு போட் போகும் ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு போகாது. கேட்டால் ரிப்பேர் என்பார்கள், அதனை தடுக்கவே திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தருக்கும் இடையே கண்ணாடி பாலம் போட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின். 
 
குறைந்த அளவு தொகையே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாஜக அரசு நிதியை தமிழகத்திற்கு குறைத்து கொண்டே வருகிறது. இந்தி படிப்பதற்கு சம்மதிக்கவில்லை என்பதால் கல்விக்கான தொகை 2 ஆயிரத்திற்கு அதிகமான கோடி நிறுத்தி வைக்கப்பட்டு தமிழகத்திற்கு நிதிச்சுமையே ஒன்றிய அரசு ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையை பாஜக அரசு செய்து வருகிறது. பணத்தை வைத்து கொண்டு பாஜக அரசு தமிழகத்தின் கழுத்தை நெறித்து கொண்டிருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் வேறு என்பார்கள், அது உண்மையல்ல” என்றார்.