நடிகர் சித்தார்த்தை மிரட்டிய கன்னட பிரமுகர்கள் - தமீமுன் அன்சாரி கண்டனம்!

 
tn

நடிகர் சித்தார்த்தை கன்னட பிரமுகர்கள் மிரட்டியதற்கு  தமீமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.  இதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும்  கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பெங்களூரில் நேற்று  முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதேபோல் கர்நாடகாவில் இன்று ளை மாநிலம் தழுவிய பந்த் நடைபெற்று வருகிறது.

சித்தார்த்

இந்த சூழலில் பெங்களூரு எஸ்.ஆர்.வ் திரையரங்கில் ‘சித்தா' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அங்கு கன்னட ரக்‌ஷா வேதிகா அமைப்பினர் நுழைந்து தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த்  பாதியில் வெளியேறினார். காவிரிநீர் விவகாரத்தில் பந்த் நடப்பதால் இந்த நேரத்தில் படம், செய்தியாளர் சந்திப்பு இதெல்லாம் தேவையா? எனக் கூறி கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இந்நிலையில் நடிகர் சித்தார்த்தை கன்னட பிரமுகர்கள் மிரட்டியதற்கு மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி  தனது சமூகவலைத்தள பக்கத்தில், "பெங்களூருவில் சினிமா தொடர்பான  ஒரு Press Meet நிகழ்வில் நடிகர் சித்தார்த்தை  கன்னட பிரமுகர்கள்  காவிரி விவகாரத்தை காரணம் காட்டி பகிரங்கமாக மிரட்டி அவரை வெளியேற்றியுள்ளனர்.அவர் சமூக பொறுப்புணர்வுமிக்க கலைஞர். அவரை மிரட்டி அவமானப்படுத்தியதை  மனிதநேய ஜனநாயக கட்சி  கண்டிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.