கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை

 
tnt

கவிஞர் கண்ணதாசனின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

tn

மறைந்த புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியரும்,  கவிஞருமான கண்ணதாசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுமார் 4000 மேற்பட்ட கவிதைகள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள், கட்டுரைகள் என பலவற்றை படைத்த படைப்பாளி கண்ணதாசன் , சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், திரை முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர் . தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த இவருக்கு சாகித்திய அகாடமி விருதானது 1980ல் அளிக்கப்பட்டது. காதல், விரக்தி, தோல்வி, மகிழ்ச்சி ,வெற்றி, கோபம், ஆசை , துக்கம் என அனைத்து காலகட்டங்களிலும் கண்ணதாசனின் பாடல்கள் அனைவரின் மனங்களுக்கும் அருமருந்தாகவே விளங்குகிறது. தேசிய விருது, சாகித்ய அகாடமி விருது, என பல சிறப்புமிக்க விருதுகளை வென்றவர் கவிஞர் கண்ணதாசன் மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

kannadasan

இந்நிலையில் ஆண்டுதோறும் கண்ணதாசனின் பிறந்தநாள் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,   கவிஞர் கண்ணதாசன் 97வது பிறந்தநாளையொட்டி தியாகராய நகரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.