குமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்த பிரிட்டிஷ் கடற்படை
Jan 13, 2025, 13:32 IST1736755353942
டிக்கோகார்சியா தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை பிரிட்டிஸ் கடற்படை கைது செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீனிபிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் டிக்கோகார்சியா தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த பிரிட்டிஷ் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது படகுகள், மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மீனவர்கள் கைது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள படகு, ஏற்கனவே 2 முறை எல்லை தாண்டியதற்காக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.


