காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை- மர்ம கும்பல் வெறிச்செயல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் மனோஜ் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் மனோஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற மனோஜின் நன்பர்கள் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் படுகாயம் அடைந்த மனோஜின் நண்பர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


