தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் திறக்க மாட்டோம் - டி.கே.சிவகுமார் அடாவடி!

 
dk sivakumar

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடியது தமிழக அரசு. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றாத கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்தது. மேலும்  காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின் படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இருப்பினும் தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது.

இந்த நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனிமேல் தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், இனி எக்காரணம் கொண்டும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி நீர் திறக்கமாட்டோம். தமிழகத்திற்கு கேட்ட அளவு நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று ஒழுங்காற்று குழு கூறிவிட்டது. ஆகையால் இனிமேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம். இவ்வாறு கூறினார்.