கார்த்திகை தீப தத்துவமும் விளக்கேற்றும் முறைகளும்..

 
1 1

கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலையில் ஏற்றும் தீபம் தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் மிகப்பெரிய கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தளவிற்கு அற்புதமான கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

தீபம் எப்படி ஏற்றுவது? 
மூன்று நாள் விளக்கேற்ற வேண்டும். முதல் நாள் பரணி தீபம் , அடுத்த நாள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டு.மறு நாளும் தீபம் ஏற்ற வேண்டும்.

ஆலயங்களில் ஏற்றும் தீப வழிபாட்டு மூன்று பெயர்கள் சொல்லப்படுகின்றது. கார்த்திகை என்றாலே ஞாபகம் வருவது கார்த்திகேயன். கார்த்திகை பெண்களால் பாராட்டி, சீராட்டி வளர்க்கப்பட்ட முருகன் ஆலயங்களில் ஏற்றப்படும் தீபத்திற்கு குமார ஆலய தீபம் என்றும், இது சைவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்பதற்காக பெருமாள் கோயில்களில் ஏற்றப்படும் தீபத்திற்கு விஷ்ணு ஆலய தீபம் என்றும், மற்றபடி மாரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் என அனைத்து கோயில்களில் ஏற்றப்படுவதற்கு சர்வ ஆலய தீபம் என குறிப்பிடுவது வழக்கம்.
 

விளக்கு எப்படி ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபம் மண் விளக்கில் ஏற்றுவது மிகச்சிறந்தது. சாதாரண பஞ்சு திரி பயன்படுத்தலாம், நல்லெண்ணெய் பயன்படுத்தலாம் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
ஒரே ஒரு விளக்காவது நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது.

விளக்கேற்றும் நேரம்:
கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.

எங்கெல்லாம் ஏற்ற வேண்டும்:
வீட்டின் வாசலில், பூஜை அறையில், சமையல் அறையில், கோ சாலையில், புற வாசல், எத்தனை அறைகள் வீட்டில் இருக்கின்றதோ அத்தனை அறைகளிலும் விளக்கு வைக்கலாம். எத்தனை விளக்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

வாழை இலை:

தீபம் வைக்கும் போது கண்டிப்பாக ஒரு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். பசு சாணம் கூட வைக்கலாம்.