அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசையின் ஆளுநர் பதவி பறிப்பு- கார்த்தி சிதம்பரம்

 
Karti chidambaram press meet

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ED attaches Congress MP Karti Chidambaram's properties worth ₹11.04 crore  in INX money laundering case - The Hindu


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “ஒன்றிய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோட்டமாக எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் வைக்கும் குற்றச்சாட்டு. எந்த திட்டத்தில் எந்த தருணத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பட்டியலிட வேண்டும். தேர்தல் நேரத்தில் கூட மோடி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது தமிழ்நாடு அரசு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை என்று மேலோட்டமாக கூறினார்கள். எந்த திட்டத்தில் ஒத்துழைக்கவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜவுளி பூங்காவுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறினால் ஜவுளி பூங்காவிற்கு நிதி ஒதுக்கி உள்ளார்களா? நிதி ஒதுக்கி எந்த வகையில் முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும், அவ்வாறு சொன்னார்கள் என்றால் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும். 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பி பலர் கிராம புறத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் 100 நாள் ஒரு நபருக்கு வேலை கொடுக்காமல் ஒரு குடும்பத்திற்கு 100 நாள் கொடுக்கிறார்கள். 60 வயதிற்கு மேல் இருப்பவர்களை வரக்கூடாது என்று கூறுகிறார்கள். இரண்டாவது நாங்கள் அவர்களுக்கு உண்டான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொன்னோம். அதையும் உயர்த்தவில்லை. இந்த நிதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. கல்வி கடன் வாங்கியவர்கள் கொரோனா காலத்தில் அந்த கடனை கட்ட முடியாமல் தவித்தார்கள். அதனால் அந்தக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தோம், அந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. மதிய உணவு திட்டத்திற்கும் காலை உணவுத் திட்டத்திற்கும் நிதி கேட்டிருந்தோம். பட்டினி பட்டியலில் 110 வது இடத்தில் இந்தியா உள்ளது. அதனால் பள்ளிக்கூடம் மூலமாக உணவு உண்ணும் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதை குறைத்து இருக்கிறார்கள். 

My only link to Aircel-Maxis is a SIM card, says Karti Chidambaram

கட்சியை விட நாடு தான் முக்கியம் என்பதை எப்போதும் நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சௌரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த அவர், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகாடாக்கப்பட்டார். இன்று மீண்டும் ஆளுநர் அறிவிப்பின் போது தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இல்லாததைக் கண்டு வருத்தம் அடைகிறேன். யாரை அமைச்சராக்க வேண்டும்? யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும்? யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் முழு உரிமை. மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம்? யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் தான் பிரதமருக்கும் அந்த உரிமை உள்ளது” என்றார்.