”செங்கோட்டையன் கருத்தை தவெகவினர் கேட்பார்களா?” - கார்த்தி சிதம்பரம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு செங்கோட்டையின் செல்வதால் எந்த விதமான மாறுபாடும் ஏற்படாது, அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்துவிடும், அவருடைய வருகை என்பது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலம் தான் அவருடைய கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறி தான். இருப்பினும் அவர் அதிமுகவிற்கு பிரிந்து சென்றது அதிமுகவிற்கு ஒரு மைனஸ் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வதால் எந்த விதமான மாறுபாடு என்பது ஏற்படாது. அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்துவிடும். ஆனால் அவருக்கு முன் அனுபவம் அதிகம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவருடைய அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அவருடைய அனுபவத்தால் கருத்துக்களை கூறினால் தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் அவர்கள் உள்ளனரா என்பது பொறுத்து பயன்படுத்தி கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான். இருப்பினும் அதிமுகவிற்கு அனுபவம் அதிகமுள்ள செங்கோட்டையன் சென்றது ஒரு மைனஸ் தான்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள் காங்கிரஸில் தேர்வு என்பது நடைபெற்று வருகிறது. இதற்கும் 2026 தேர்தல் முடிவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை, இதனால் காங்கிரஸ் தேர்தலில் வாக்குகள் வாங்காது என்பது கிடையாது. அதுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கூட்டணி நம்பி தான் தேர்தல் என்பது நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் பலம் அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவை தான் வெற்றி தோல்வியை நிர்வகிக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பாலியல் கொடுமை கொடுமைகள் குறைய வேண்டுமென்றால் காவல்துறை தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் ரவுடி லிஸ்டில் இருப்பவர்களை இரண்டு தினங்களுக்கு ஒரு முறை காவல் நிலையத்திற்கு வரக்கூடிய அவர்களுடைய நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் மட்டுமே குற்றங்கள் குறையும்.
காவல்துறை மட்டுமல்லாது மருத்துவ துறை உள்ளிட்ட பலத்துறைகளில் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளது இதனால் அரசு நிர்வாகம் என்பது சரிவர நடத்த முடியவில்லை. எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் முதலில் தொடங்கி இருக்கலாம் தற்போது தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது கால நீட்டிப்பு தர வேண்டும். யாரும் எஸ்ஐஆர் பணிகள் நடத்தக்கூடாது என்று கூறவில்லை, ஆனால் கால அவகாசத்தோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் இரட்டை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக தான் உள்ளது” என்று தெரிவித்தார்.


