"எங்க அப்பன் வீட்டு காசு தான் ; விஜயகாந்துக்கு செய்தது நாகரீகத்தின் உச்சம்" - கரு.பழனியப்பன் அதிரடிபேச்சு

 
tn

கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் , சமீபத்தில் மறைந்து போன விஜயகாந்த்-க்கு தமிழ்நாடு முதல்வரும்,  தமிழ்நாடு அரசும் காட்டிய பண்பு நாகரிகத்தின் உச்சம்.  அதை தாண்டுவதற்கு இன்னொரு இடம் கிடையாது.  ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் அவருக்கு இருமுறை சென்று மரியாதை செலுத்துவதும் , ஒரு அமைச்சராக இருக்கும் உதயநிதி மூன்று முறை சென்று பார்ப்பதும் நாகரிக அரசியல்.  நாகரிக அரசியல் நடத்துகிறார்கள்,  நாகரிக அரசியல் நடத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள் அல்லவா/? பின்பு யார் தான் அதை தொடங்குவது. அது ஸ்டாலின் தொடங்கியதாக இருக்கட்டும்.

tn

இது அப்பன் வீட்டு காசா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்லணும்.  ஆமாம் அப்பன்  வீட்டு காசு தான்.  ஏன்னா எங்களுக்கு அப்பன் பெரியார்.  பெரியார் வீடு தமிழ்நாடு. தமிழ்நாடு காசு இது அதனால் எங்கள் அப்பன் வீட்டு காசு தான். பத்திரிகையாளராக நான் பார்த்த கலைஞரைப் பற்றி சொல்கிறேன்.  கலைஞர் பெரியாரை விட்டு வெளியே வந்து திமுக என்ற கட்சியை அண்ணா தலைமையில்  ஆரம்பிச்சாச்சு.  பெரியார் எப்படி யோசித்து யோசித்து பாராட்டுவாரோ,  அந்த அளவிற்கு யோசிக்காமல் திட்டுவார்.  திட்டுவது என்றால் கண்ணாபின்னா என்று திட்டுவார். அவரிடம் திட்டுவாங்கி யாராலும் பிழைக்க முடியாது.  அப்படி பிழைத்தவர்கள் திமுகவினர் மட்டும்தான்.  தாயெல்லாம் சம்பந்தப்படுத்தி அப்படி பேசுகிறார்.  அதற்கு பத்திரிகையாளர்கள் என்ன பெரியார் இப்படி திட்டுகிறார் என்று அதிர்ந்து போய் விட்டார்கள்.  அவர்கள் உடனே அண்ணாவிடம் போய் என்ன இப்படி தாயைப் பற்றி எல்லாம் பெரியார் திட்டுகிறாரே என்று கேட்கிறார்கள்.   அதற்கு அண்ணா அவர் நம் தலைவர் அவர் திட்டுகிறார் அதற்கு என்ன பண்ண முடியும் என்று சொல்கிறார்.



இதையடுத்து பத்திரிகையாளர்கள் கலைஞர்களிடம் சென்று பெரியார் இப்படி தாயைப் பற்றி எல்லாம் திட்டுகிறாரே என்று கேட்கிறார்கள்.  உடனே அதற்கு கலைஞர் சொல்கிறார் , நாங்கள் அவரை தந்தை பெரியார் என்று சொல்கிறோம். எங்கள் தாய்  யார் என்பது அவருக்கு தான் தெரியும்.  அதனால் நீங்கள் அவரிடமே சென்று கேளுங்கள் என்று சொல்கிறார்கள்.  உடனே பத்திரிகையாளர்கள் ஆஹா  என்று நினைத்து கொண்டு, பெரியாரிடம் கலைஞர் சொன்னதை பற்றி சென்று கேட்கிறார்கள் . அதற்கு பெரியார் , கடவுளையே கண்ட்ரோல் பண்ணி விட்டேன் இந்த கருணாநிதியை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை என்றார்.  அந்த இடத்தில் உரிய பதில் சொல்வது என்பது இருக்கிறது அல்லவா ? அதை நான் கலைஞருக்கு பிறகு உதயநிதியிடம் தான் பார்த்தேன் என்று பாராட்டி பேசியுள்ளார்.