நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு!!

 
ttn

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது.

election

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் இடப்பங்கீடு தொடர்பாக ஆலோசித்து வருகின்றன . அதேசமயம் பல்வேறு மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலையும்  அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. அதேசமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பாமக, பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,தேமுதிக ,மக்கள் நீதி மய்யம்  மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தையும் ,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

tn

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம். தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம்கண்டு வரும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் , கரும்பு விவசாயி சின்னத்தில் தனித்து களம் காண்கிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திருச்சி, வேலூர், மதுரை ,கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே  அறிவிக்கப்பட்ட நிலையில் திருப்பூர், காஞ்சிபுரம் ,சிவகாசி ,நாகர்கோவில், கோவை மாநகராட்சி வேட்பாளர் பட்டியலும், ஓசூர் ,ஆவடி, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.