‘கருணாநிதியின் மகன்.. சூரியனைப் போல விடியல் ஆட்சி செய்க’- காயத்ரி ரகுராம் வாழ்த்து.. திமுகவில் இணைய அடித்தளமா??

 
‘கருணாநிதியின் மகன்.. சூரியனைப் போல விடியல் ஆட்சி செய்க’- காயத்ரி ரகுராம் வாழ்த்து.. திமுகவில் இணைய அடித்தளமா??

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி , காயத்திரி ரகுராம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வைரலாகி வருகிறது. திமுகவில் இணைய அடித்தளமா என பலரும்  விமர்சித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அண்மையில் பாஜகவில் இருந்து விலகி அக்கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும்  காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.  அதில், “சூரியனைப் போல விடியலாக ஆட்சி வழிநடத்துவாயாக, சூரியனின் கதிர்களைப் போல மக்களுக்கு சேவை செய்வாயாக, ஒருபுறம் விடியலாகவும், மறுபுறம் அந்தி மயமாகவும் இருக்கலாம், ஆனால் சூரியன் மறைவதில்லை. பூமிக்கு தலைவனாக சூரியன், தமிழக மக்களுக்கு தலைவனாக கருணாநிதியின் மகன்.

mk stalin

உங்கள் உண்மையான கடின உழைப்பு மற்றும் 55 வருட அரசியல் சேவை எங்களுக்கு ஒரு பெரிய உத்வேகம். உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியையும் தர இறைவனை வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாண்புமிகு முதல்வர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா ” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கலைஞர் என்று குறிப்பிட்டிருக்கலாமே, கருணாநிதி என்று ஏன் குறிப்பிட்டீர்கள் என சிலர் விமர்சிக்க அதற்கும் விளக்கம் அளித்து மற்றொரு பதிவை போட்டிருந்தார். அதில், “நான் என் அப்பாவை டான்ஸ் மாஸ்டர் என்று அழைக்காமல் ரகுராம் என்று அழைக்க விரும்புகிறேன். அவர் உலகத்துக்கு டான்ஸ் மாஸ்டர், எனக்கு என் அப்பா ரகுராம்.அந்த வகையில் கருணாநிதி அய்யா பெயர் அப்பா பாசத்தில் குறிப்பிட்டேன்.அவர் பெயர் ஒரு மாபெரும் தலைவர் கலைஞர் பெயர் என்று அனைவருக்கும் புரியும் ” என்று பதிவிட்டுள்ளார்.