அன்னபூர்ணா விவகாரம்- இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்?: கருணாஸ்

 
“உயிரே போனாலும் கூவத்தூர் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன்” – கருணாஸ் கொந்தளிப்பு

ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர், இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்?... என நடிகர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்னபூர்ணா சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரினார்.

கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழிலதிபர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற அன்னபூர்ணா உணவகக் குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன், ஒரே கடையில் ஒரு வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களில் இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி, பன்னுக்கு ஒரு ஜி.எஸ்.டி., கிரீம் வைத்தால் அதற்கு ஒரு ஜிஎஸ்டி என ஏன் இத்தனை ஜிஎஸ்டி? என கேள்வி எழுப்பினார். மேலும், இதனால் வாடிக்கையாளர்களுக்கும், தொழில் நடத்துபவர்களுக்கும் முரண் ஏற்படுவதாக நியாயமான கருத்தையே முன்வைத்தார். இந்த கருத்தை ஆக்கப்பூர்வமான ஒன்றாக கருதி, அவர் குறிப்பிட்ட அந்த பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், குறிப்பிட்ட அந்த தொழிலதிபரை அமைச்சர் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து, அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லி, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னையில் உள்ளே தனியார் மருத்துவமனையில் அனுமதி!

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய     நடிகர் கருணாஸ், “ஒரு நடிகராக நான் சம்பாதிக்கும் 18% பணத்தை ஜிஎஸ்டிக்காக கட்டுகிறேன். நான் வறுமையில்தான் இருக்கேன். ஆனாலும் நான் அரசாங்கத்தை மதித்து வரியை கட்டுகிறேன், ஏனெனில் அந்த பணத்தை அரசு மக்களின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால்தான். ஆனால் அப்படி இல்லை. மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்..? ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர், இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்?...