#BREAKING விஜய் செய்த இந்த தவறே உயிரிழப்புக்கு காரணம்- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்

 
s s

தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 39 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். 

கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு? | 33  people killed in stampede at Vijay's campaign rally in Karur?

இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள தகவலின் படி,

▪️ 12.45 மணிக்கு விஜய் கரூரில் பேசுவார் என த.வெ.க. அறிவித்திருந்தது. ஆனால் 5 மணி நேர தாமதமாகத்தான் அங்கு வருகை தந்தார். 

▪️ பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும் லைட் ஆப் செய்துவிட்டு உள்ளே சென்றார். இதனால், சாலை நெடுக அவரை பார்க்க காத்திருந்தவர்கள்,  கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்துள்ளனர்

▪️ அதிகப்படியான கூட்டம் கூடியதால் சூழல் கட்டுக்குள் இல்லாமல் போனது. 10,000 பேர் வருவார்கள் என அனுமதி வாங்கப்பட்ட இடத்தில் 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டனர்

▪️ கட்சியில் இருந்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய தன்னார்வலர்கள் இல்லை. குடிநீர், மருந்து, மருத்துவக் குழு எதுவும் அங்கே இல்லை

▪️ காலை முதல் கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளனர்

▪️ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.