வடிகால் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

 
ச் ச்

ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதியில் ஒன்றரை சாய்ரட்சன் வயது குழந்தை வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்தான்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை கீழ் பாதி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பொழிந்து, இன்று சகஜ நிலை திரும்பிய நிலையில் பழனியின் இரு மகன்களும் பொத்தேரியில் இருந்து பெரிய ஏரி செல்லும் வாக்காளில் ஆண்டுதோறும் பலத்த மழை காரணமாக முழங்கால் வரை மழை நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும். இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்வது வழக்கம். 

இந்நிலையில் பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த கீழ்பாதி பழனிவேல் மகன் சாய் ரட்சன் வயது (1 1/2) வாய்க்காலில் வடிகால் மழை நீரில் அடுத்து செல்லப்பட்டு விட்டதாக அவரது உறவினர்கள் தேடி வந்தனர். பழனியின் மகன்கள் இருவரும் வடிகால் வாய்க்காலில் உள்ள மழை நீரை பார்ப்பதற்காக வெளியே வந்த நிலையில் பழனியின் இளைய மகன் வாய்க்காலில் தவறி விழுந்து விட்டான். உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் போராடி குழந்தையை மீட்டனர். அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டதில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இது குறித்து சோழதரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.