ஜூன் 4ஆம் தேதி போதுமான அளவு தண்ணீரை கையில் வைத்து கொள்ளுங்கள் – பிரசாந்த் கிஷோர் கிண்டல் !
மேலும், “2021ஆம் ஆண்டு மே 2-ம் தேதி மற்றும் மேற்கு வங்கத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் பிரசாந்த் கிஷோர் எக்ஸ் சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, ”2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற இடங்களைப் போலவோ அல்லது அதைவிட சற்று கூடுதலாகவோ இந்த முறை பாஜக ஆட்சியை பிடிக்கும். அவர்கள் ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கான எந்த அபாயத்தையும் நான் பார்க்கவில்லை” என்று பிரசாந்த் கிஷோர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
இதனால் அவர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
Drinking water is good as it keeps both mind and body hydrated. Those who are RATTLED with my assessment of outcome of this election must keep plenty of water handy on June 4th.
— Prashant Kishor (@PrashantKishor) May 23, 2024
PS: Remember, 02nd May, 2021 and #West Bengal!!