ஜனநாயகக் கடமையாற்றிய குஷ்பூ, சுந்தர்.சி..!

 
1

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி நடிகையும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்பூ மற்றும் அவரது கணவரும், மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளர் சுந்தர்.சி தங்களது மகள்களுடன் வாக்களித்தனர். சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

வாக்களித்த பிறகு நடிகை குஷ்பூ செய்தியாளர்களிடம் கையில் மை வைத்ததை காண்பித்தார். அதிமுக வேட்பாளரான சுந்தர்.சி பச்சை நிற உடையுடன் வந்து வாக்களித்தார். மேலும் ராயபுரம் அதிமுக வேட்பாளர் மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவர் வாக்களித்து வெளியில் வந்த பிறகு குஷ்பூ மற்றும் ஜெயக்குமார் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர்.