#Kushboo குஷ்பூ எழுதிய கடிதம்- அதிர்ச்சியில் பாஜக!

 
kushbu-44 kushbu-44
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் அதன் முன்னணி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் அனைத்து தொகுதிகளையும் வலம் வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரமுகரும் பிரபல நடிகையுமான குஷ்பூ சில நாட்களாக பிரச்சாரம் செய்து வந்தார். 
கடந்த சில நாட்களாகவே , நடிகை குஷ்பு எலும்பில் ஏற்பட்ட காயத்தால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று பாஜக தலைவர் ஜே பி நட்டா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் "சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன் என்றும் எலும்பில் ஏற்பட்ட காயத்தால் தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் தன்னால் பிரச்சாரத்தில் இனிமேல் கலந்து கொள்ள முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.