மக்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் - குஷ்பு

 
khushbu khushbu

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான அரசங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் தெரியவந்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். 

288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய அணி ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான இடங்களுக்கும் அதிகமாக பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக கூட்டணி மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில், மக்கள் பிரதமர் மோடி தலைமையிலான அரசங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் தெரியவந்துள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிராவின் மகத்தான தேர்தல் முடிவுகள், நமது மாண்புமிகு பிரதமரின் தலைமையில் சந்தேகம் கொண்டவர்களின் வாயை மூடிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் பாஜக மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.