கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடப்படும் - தமிழக அரசு அறிவிப்பு..

கிண்டி சிறுவர் பூங்கா

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள் இருந்தாலும் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா மிகவும் பிரபலமான ஒன்று.  ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அழகிய பூங்கா, நாடு சுதந்திரமடைந்த பிறகு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1958ம் ஆண்டு  தேசிய சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டது.  அதன்பின்னர் சென்னைவாசிகள் உட்பட, விடுமுறைக்கு சென்னை வருபவர்களுக்கும்  பிடித்தமான சுற்றுலா தளமாக இருந்து வருகிறது.   இங்கு மான், நரி, கழுதை புலி, முதலை, பாம்புகள், காட்டு முயல்கள், அணில்கள், மயில், வான்கோழி, எலிகள் உள்ளிட்ட பல  உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நாளை முதல் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அரசு அனுமதி!

தற்போது இந்த கிண்டி சிறுவர் பூங்கா சேதமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது.  சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவாக  மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இயற்கைக் கல்விக்கான முதன்மை மையமாக மாற்றவும், வன உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்தவும் திட்டமிட்டு, 6 மாதங்களுக்கு இந்த பூங்காவை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
 தொல்காப்பிய பூங்கா
சிறுவர்கள் விளையாடும் வகையில் அம்யூஸ்மெண்ட் பார்க்குகள், வாட்டர் கேம்ஸ் உள்ளிட்டவை கொண்டுவரப்படும் என்றும், அதிகளவில் விலங்குகள், பறவைகள் கொண்டுவரப்படும் என்றும், பூங்காவிற்கு உள்ளேயே உணவகங்கள் அமைக்கப்படும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான மேம்பாட்டுப் பணிகளைத் திறம்படவும், விரைவாகவும் முடிப்பதற்காக கிண்டி சிறுவர் பூங்கா வரும் ஜூன் 19- ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்கள் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.  