திருச்சி திரையரங்குகளில் கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் ரத்து

 
அ அ

திருச்சி மாவட்டத்தில் திரையரங்குகளிலிருந்து கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படம் கடந்த ஜீலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்த திரைப்படத்தில் ஈழ தமிழர்கள் இழிவுப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை கொடுத்து வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு சென்று அந்தந்த திரையரங்குகளின் நிர்வாகிகளிடம் நாம் தமிழர் கட்சியினர் கிங்டம் திரைப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து படம் திரையிடப்பட்டால் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அந்த திரையரங்குகளில கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் திரையரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கிங்டம் படத்தின் பிளக்ஸ்களை திரையரங்க ஊழியர்கள அகற்றினர்.