டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இருந்து ‘கிசா 47’பாடல் நீக்கம்!

 
DD DD

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிசா 47’பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இந்த திரைப்படத்தில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் நாளை திரைக்கு வரவுள்ளது.  இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கிசா 47’(Kissa 47) சிலரிடம் எதிர்ப்பை சம்பாதித்தது. பாடலின் முதல் வரிகள், ‘ஸ்ரீனிவாசா கோவிந்தா... ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா...’ என ஆரம்பித்த நிலையில் இந்த வரிகள் பெருமாளை கிண்டல் செய்யும் படி இருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும் பா.ஜ.க. வழக்கறிஞர்கள் சார்பில் சேலத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிசா 47’பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த பாடல் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பாடலை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்தது.