ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் - அமைச்சர் ராமச்சந்திரன்

 
ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் - அமைச்சர் ராமச்சந்திரன் ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் - அமைச்சர் ராமச்சந்திரன்

கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழ்நாடு முழுவதும் 85,521 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது பெய்துவரும் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும்.

சென்னை மற்றும் புறநகரில் நேற்று முதல் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த கனமழை பெய்துவரும் நிலையில், நேற்று சென்னையில் சராசரியாக 15 செண்டி மீட்டர் மழை பதிவானது. டிட்வா புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன மற்றும் 1601 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன” என்றார்.