திமுகவை வீழ்த்த பலர் முயற்சிக்கிறார்கள்; அது ஒரு போதும் நடக்காது- அமைச்சர் கே.என்.நேரு

 
“ஒன்றாகவே இருக்கிறோம்; ஒன்றாகவே வெல்வோம்” – அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

“ஒன்றாகவே இருக்கிறோம்; ஒன்றாகவே வெல்வோம்” – அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி!

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் மீண்டும் தளபதி ஸ்டாலின் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.  எனவே அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் திருச்சி மாவட்டத்தில் விரைவில் அனைத்து தொகுதிகளிலும் கலைஞரின் உருவ சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் தான் நம் அனைவரையும் உருவாக்கியவர், கலைஞர் தான் நம்மை ஆளாக்கியவர், கலைஞர் தான் நம்மை வளர்த்து எடுத்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இன்றைய நிலையில் தளபதியின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறைகளை சொல்லி அடுத்து நாங்கள் தான் என்று பலர் பேசி வரும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த அறிவாலயத்தில் இருந்து நாங்கள் சொல்லுகிறோம் மீண்டும் தலைவர் தளபதி தான் முதல்வராக ஆட்சி பொறுப்பில் ஏறுவார். 

2026 ஆம் சட்டமன்றத் தேர்தலில் முன்னோட்டமாக 23 ஆம் தேதி திருச்சிக்கு துணை முதலமைச்சர் வருகிறார். அவர் துறையூரில் புதிய நூலகத்தை திறந்து வைத்து, கலைஞரின்  உருவ சிலையை திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.  எனவே தளபதியின் வெற்றி என்பது இந்த திருச்சியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. நிச்சயம் நம்முடைய தளபதி மீண்டும் முதல்வர் ஆவார் என்று கூறினார். இன்று திமுகவை வீழ்த்த பலர் முயற்சிக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது” என்றார்.