கொடைக்கானலில் கோடை விழா - 4 லட்சத்தை தாண்டிய இ-பாஸ் எண்ணிக்கை!!

 
kodaikanal


 கொடைக்கானலுக்கு செல்வோர்க்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இ பாஸ் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு தோறும் கோடை விழா நடைபெறும் . தோட்டக்கலைத்துறை சார்பாகவும் சுற்றுலாத் துறை சார்பாகவும்  நடத்தப்படும் மலர் கண்காட்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பர். 

tn

அந்த வகையில் கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா வருகிற 17ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் விழா வருகிற 15ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் ,பாரம்பரிய விளையாட்டுகள்,  படகு அலங்கார அணி வகுப்பு ,மீன்பிடித்தல்  உள்ளிட்ட  போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

tn

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்குசுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது மே, ஜூன் மாதங்களுக்கு சுற்றுலா வர 54, 112 வாகனங்கள் பதிவு செய்துள்ளன; மே 7 முதல் இன்று வரை 9,555 வாகனங்கள் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  நாளொன்றுக்கு சராசரியாக 1,500 வாகனங்கள், 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.