திராவிட மாடல் ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள்- கோவி.செழியன்

 
 “ஆளுநருடன் மோதல் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்”- கோவி செழியன்

பாதிக்கப்படும் பெண்கள் இப்பொழுது துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத் தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார்.

எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” - எடப்பாடி பழனிசாமி |  nakkheeran

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.

முன்னேறிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை உயர்கல்வியில் தமிழகம் பெற வேண்டும்:  அமைச்சர் கோவி. செழியன் | Higher Education Minister Kovi Chezhiyan praised  about tn cm ...

திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார். இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.