காமராஜருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய அண்ணாமலை - கே.பி.முனுசாமி கண்டனம்!

 
kp munusamy

பிரதமர் மோடியை  காமராஜர் உடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , சமூக நீதிக்கு இந்தியாவில் இரண்டு தலைவர்களைத்தான் உதாரணமாகக் கூற முடியும். கர்மவீரர் காமராஜர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி அவர்கள். கர்மவீரர் காமராஜர் அவர்களைப் போலவே, நமது பிரதமர் அமைச்சரவையில் 80% இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். மோடி அவர்கள் வந்தால்தான், தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்.

Annamalai

மோடி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினால், நமது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த காங்கிரஸ் 2019 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. திமுக இருக்கும் ஊழல் இந்தி கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யார் என்று முதலமைச்சர் ஸ்டாலினால் கூற முடியுமா? காங்கிரஸ் மூத்த தலைவர் கார்த்தி சிதம்பரமே, நமது பிரதமர் மோடியை எதிர்க்க வேறு எந்தத் தலைவர்களும் இந்தியாவில் இல்லை என்று கூறியிருக்கிறார்.

KP Munusamy

வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நேர்மைக்கு, ஆளுமைக்கு, இந்தியாவின் எதிர்காலத்திற்காக தமிழகமும் வாக்களிக்க வேண்டும். பாஜக போட்டியிடும் தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் மோடி அவர்களே போட்டியிடுகிறார் என்று கருதி, மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ஊழலற்ற, நேர்மையான,மக்கள் நலன் சார்ந்த, புதிய அரசியல் சகாப்தத்தை தமிழகத்தில் எழுதுவதற்கான நேரம் வந்து விட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காமராஜருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசிய, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்காமல் வஞ்சிக்கிறது. மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் காமராஜர். அவருடன் தற்கால தலைவர்களை ஒப்பிட்டால் சரியாக இருக்காது. தற்போது உள்ள எந்த தலைவர்களையும், காமராஜர் உடன் ஒப்பீடு செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.