வெளிநாட்டு நிதியால் ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக ஆளுநர் கூறுவது தவறு - கே.பி.முனுசாமி பேட்டி

 
kp munusamy

வெளிநாட்டு நிதியால் போராட்டத்தை தாண்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக ஆளுநர் கூறுவது தவறு என கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். 

சென்னையில் அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலை மூடியதற்கான காரணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து குறித்து கேஎள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:  கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவது பற்றி எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார். ஸ்டெர்லைட் மூடப்பட்டது குறித்து ஆளுநர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கிற ஒரு தலைவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கே அழகு இல்லை.  

வெளிநாட்டு நிதியால் போராட்டத்தை தாண்டி ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக ஆளுநர் ஆளுநர்கூறியதற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்தகால அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பிரதமர் மோடி கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார். அப்படி இருக்கும் போது அந்நிய நாட்டு பணம் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார். சட்டவிரோதமாக பணம் வந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருப்பார் பிரதமர் மோடி என்றார்.